Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எலும்புகள் வலுப்பெற பெரிதும் உதவும் உளுந்து...!

எலும்புகள் வலுப்பெற பெரிதும் உதவும் உளுந்து...!
இரும்பு சத்து நிறைந்தது. உடலுக்கு சக்தி அளிக்கும். சீரணத்திற்கு உதவும். இருதயத்தை வலுப்படுத்தும். கடும் நோயில் இருந்து மீண்டவர்களும், உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம்.
* உடல் வலு பெற உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும்.
 
சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.
 
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.
 
எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. 
 
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை.
 
உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
 
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்...!