Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் கருந்துளசி !!

Webdunia
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும். ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். 

மிளகுடன் 10 துளசி இலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும். காலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு 5 இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கி விடும்.
 
வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறித்து வாயில் மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். வாயும் துளசி மணம் கமழும்.
 
இரவில் செம்பு (அ) பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப் பருக வேண்டும். உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும்.
 
கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது. ஓசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரி செய்கின்றது.
தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.
 
சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லைகளால் ஏற்பட்ட சளி நீங்கும்.
 
அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
 
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 5, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments