Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான  கொழுப்பு ஆகியவை உள்ளன.
 
உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு  வகிக்கின்றன.
 
முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.
webdunia
ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும்  இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.
 
முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும்  சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது...?