Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
பப்பாளி இலை, பப்பாளி காய், பப்பாளி பழம் என அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 

கண்களில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய பப்பாளி பழம் மிகவும் பயன்படுகிறது.பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல் வளர்ச்சியில் நல்ல மாற்றம் உண்டாகும். பப்பாளி எலும்புகளை வலுப்படுத்துகிறது. 
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரம் ஒரு முறை பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற முடியும்.
 
தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு சீக்கிரத்திலேயே நீங்கும்.
 
பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
 
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் வெந்நீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாது.
 
மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

கோதுமை மாவு ஒன்று போதும் சருமம் மென்மையாக.. ஆச்சரிய தகவல்..!

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments