Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்றாடம் உணவில் கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !!

Advertiesment
Chickpeas
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (18:12 IST)
கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை உண்பதால் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.


கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கொண்டைக்கடலையில் கிட்டத்தட்ட 19 ப்ரோடீன் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்களின் முடி, நகம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு ப்ரோடீன் சாது மிக முக்கியம். எனவே தினமும் 100 கிராம் கொண்டைக்கடலையினை உட்கொள்ளலாம்.

கொண்டைக்கடலியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் கொண்டைக்கடலியில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடையினை குறைக்க நார்சத்து மிக முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்சத்து உள்லதால், தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொண்டைக்கடலை உண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியம் மேம்படும். தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையினை உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமான ஜீரண மண்டலம் இருக்கும்.

கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும். எனவே இரத்த அழுத்தத்தினை குறைக்க விரும்புவார்கள் தினமும் கொண்டைக்கடலையினை உண்டு வரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த வகை கூந்தலாக இருந்தாலும் பராமரிக்க சிறந்த அரிசி கழுவிய தண்ணீர் !!