Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

Advertiesment
முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் பலன்கள் !!
முலாம்பழம் மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பல நிறங்களில் காணப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப் பட்டு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாத காலங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

கோடைகாலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழ துண்டுகளை ஊறவைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.
 
முலாம்பழத்தை பழச்சாறாக குடித்தால் கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும். கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப்படுத்தும். 
 
வேர்க் கசாயம் வாந்தியை நிறுத்தும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும். பழச்சாறுடன் இனிப்பு கலந்து உண்டால் சொறி, சிரங்கு நீங்கும். பால் சுரப்பை அதிகரிக்கும். பழத்தை கூலாக்கி எக்சிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க்  கடுப்பு போன்றவை குறையும்.
 
முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை  தீரும்.
 
விதைகளை பொடித்து உண்ண வயிற்றுப் புழுக்கள் மாறும். இதன் விதைகளை அரைத்து நச்சுப் பூச்சிகள் கடித்த இடத்தில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.  பழச்சதையை சீரகம், இஞ்சி சாறு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்று கோளாறுகள், குடல் நோய்கள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்