தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் !!
தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் மூலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.
ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடிபட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.
எலுமிச்சை பழசாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல்,வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.
தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவதன் முலம் உடல் எடை குறையும். எலுமிச்சையில் இருக்கக்கூடிய சத்துகள், நம் உடலில் சேருகின்ற டாக்சின்களை வெளியேற்றும். இது அதிகப்படியாக சேர்ந்தால் நம் உடல் மிகவும் சோர்வுற்று காணப்படும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதினால் உங்களின் செரிமானத்தை இது தூண்டுகிறது.
அடுத்த கட்டுரையில்