Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் காலையில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
முட்டைக்கோஸில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்களும் அதனால் கிடைக்கும் நன்மைகளும் அதிகமாக நிறைந்துள்ளது.

முட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால், அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் நம் உடல் உறிஞ்சிக்  கொள்கிறது. 
 
முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் இருப்பதால், எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இது குடலில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை அழித்து, குடல்புண் வராமல் தடுக்கிறது. 
 
முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள சத்துக்கள் சுவாசப் பாதையில் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
 
முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம் இருப்பதால், இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வராமல்  தடுக்கிறது. 
 
முட்டைக்கோஸில் சல்ஃபோரபேன் உள்ளது. எனவே இதனை ஜூஸ் செய்து குடித்தால், நம் உடம்பில் ஏற்படும் புற்றுநோய்களின் தாக்கம் வராமல் தடுக்கிறது.
 
முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால், நம் உடம்பில் ஏற்படும் ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி போன்ற  பிரச்சனைகளை தடுக்கிறது. 
 
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நம் உடம்பில் அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, அல்சர் பிரச்சனைகளை விரைவில் குணமாக்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments