Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத மருத்துவகுணங்கள் நிறைந்த சுக்குவின் பயன்கள் !!

அற்புத மருத்துவகுணங்கள் நிறைந்த சுக்குவின் பயன்கள் !!
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.


மூலிகைப் பொருட்களில் "சுக்கு" எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் முதலிடம் பெறுகிறது.
 
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி  முற்றிலும் குணமாகும்.
 
சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம்  செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
 
சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம்  குணமாகும்.
 
சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
 
சுக்குடன் சிறுது பால் சேர்த்து மைய அரைத்து நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்தில் ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டு வலி முற்றிலும்  குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் சாப்பிடும் உணவுகள் !!