சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.
சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எனவே சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியடையும்.
இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் சேர்த்து குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.
எளிதில் செரிமானம் ஆவதற்கு, சுண்டை வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் நீங்கும்.
சளி அல்லது ஜலதோஷம் உள்ளவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து அல்லது சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.
சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.