Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்தயக் கீரையை தினசரி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!!

Webdunia
வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.
 
வெந்தயக் கீரை மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் அஜீரண சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வயிற்றுக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
 
கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து வெண்ணெய்யில்  வதக்கிச் சாப்பிட்டால் பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.
 
10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
 
வெந்தயக் கீரையின் இலைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறைகிறது. கீரையில் உள்ள  அமினோ அமிலம் உடலில்
 
இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் எப்போதும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
 
வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவை போக்கி கண்பார்வையை அதிகரிக்கும்.
 
வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments