Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்...!!

உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்...!!
உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மிகஸ், புரோட்டின், தாது உப்புக்கள் மற்றும்  அமைலேஸ் என்கிற என்சைம் ஆகியவை இருக்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ்நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள்  தள்ளப்படுகிறது.
உமிழ்நீரிலுள்ள என்சைம் நாம் சாப்பிடும் உணவில் ரசாயன மாற்றங்களை வேகமாக ஏற்படுத்த உதவி செய்கிறது. இந்த என்சைம்  இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக வாரக்கணக்கில் ஏன் மாசக் கணக்கில்கூட ஆகும்.
 
உமிழ்நீரிலுள்ள அமைலேஸ் என்கிற நொதி (என்சைம்) நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டை மால்டோஸ் என்கிற சர்க்கரைப் பொருளாக மாற்று வதற்கு உதவி செய்கிறது. உணவு சிறுகுடலில் போய்ச் சேரும்போது இன்னும் அதிகமாக அமைலேஸ் என்சைம் கணையத்திலிருந்து சுரக்கப்பட்டு உணவில் மிச்சம் மீதியிருக்கும் ஸ்டார்ச்சையும், மால்டோசாக மாற்றிவிடுகிறது. 
webdunia
         
நமது உமிழ்நீரிலுள்ள மிசின் என்கிற பொருள் வாய் எப்பொழுதும் ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதேமாதிரி உமிழ் நீரிலுள்ள  லைசோசைம் என்கிற பொருள் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடுகிறது.
 
வயிற்றுக்குள் போய் எல்லா உணவும் ஜீரணம் ஆகிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. உணவு வாயில்  போடப்பட்டவுடன் உதடு, கன்னம், நாக்கு ஆகியவற்றிலுள்ள தசைகள் ஒன்று சேர்ந்து வாயினுள் போடப்பட்ட உணவை வாயினுள்ளேயே  சிறிது நேரம் வைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது.

அதே நேரத்தில் வாயிலுள்ள 3 உமிழ்நீர் சுரப்பிகள் சுரக்கும் திரவம் வாயில் போடப்பட்ட  உணவுக் கவளத்தைச் சூழ்ந்து செரிமானத்திற்கு தயாராகிறது. பற்களுக்கிடையில் மாட்டிய உணவு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின்பக்கத்திலுள்ள பற்களால் மிகச்சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்டு விழுங்குவதற்கு ஏதுவாக தயாராகிறது.
 
நாக்கிலுள்ள சுவை நரம்புகள் நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்குத்  தேவையான சரியான என்சைம்களை சுரக்கச் செய்கிறது. நாக்கு இப்படியும் அப்படியும் புரளும்போது நாக்குக்கு இடை யில் உணவுத்துண்டுகள்  பாதி நிலையில் ஜீரணமாகி ஒரு உருண்டையாக ஆக்கப்பட்டு நாக்கு மூலமாகவே அந்த உணவு உருண்டை தொண்டைக்குள் தள்ளப்படுகிறது.  தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் இறங்கிய உணவு அங்குள்ள 5 என்சைம்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஜீரணமாகும் வேலையை ஆரம்பிக்கிறது. ஆகவே சாப்பிடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக மருத்துவ பயன்களை கொண்ட பப்பாளியின் பயன்கள்!!