Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்திக்காயை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருமா...?

Advertiesment
அத்திக்காயை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருமா...?
அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும்  வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. 
 
அத்திப்பழத்தை அப்படியே காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.
 
இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.
 
அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி  குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.
 
அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க  வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
 
அத்திப் பிஞ்சினால் மூலம், வாயு, மூலக் கிராணி, வயிற்றுப்புண், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மருதம் பட்டை !!