Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும் வாழையிலை குளியல் !!

உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும் வாழையிலை குளியல் !!
இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது. நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும். வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும். 

இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது படபடப்பாக உணருவர். அதற்கு பயப்படத் தேவையில்லை. இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு தண்ணீர் அருந்தவேண்டும்.
 
மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது. ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும். நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும். அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும்.
 
போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு போடவும். (சிகிச்சை எடுப்பவரை  வாழையிலையில் கட்டுவதற்காக). இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும். நாம் உண்ணும் பகுதி நமது உடலின் மேல் படுமாறு இருக்கவேண்டும். சிகிச்சை  எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும். மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விடவும்.
 
20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம். மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம். 1/2 முதல் 1 லிட்டர் வரை  கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும்.
 
பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 1/2 மணிநேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும். உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும்.
 
இலைகளில் விஷமேறி விடுவதால் இதை உரமிடுவதோ ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது. இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ, தலைவலியோ இருக்கும். பயப்படத்தேவையில்லை.
 
ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும். நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தான்றிக்காய் எதற்காக பயன்படுத்தப்படுகிறது இதன் நன்மைகள் என்ன...?