Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கிய நன்மைகளை ஏராளமாக அள்ளித்தரும் பேபி கார்ன் !!

Webdunia
பேபி கார்னில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ, ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தெனிக் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் பேபி கார்ன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நண்மைகளும் ஏராளம். 

பேபி கார்னில் கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகளும் குறைவாக உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க வழக்கமான உணவில் இவற்றை கண்டிப்பாக சேர்க்கலாம். மேலும் சோளத்துடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் குறைவான மாவுச்சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. 
 
பேபி கார்ன்கானில் இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் கண் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் ஏ -யின் நல்ல ஆதாரமான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நம் கண்களைப் பராமரிக்கலாம். 
 
நமது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று பேபி கார்ன். ஏனெனில் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இவை சரும செல்களை சரிசெய்ய உதவுகின்றன. இதுதவிர நம் உடலின் தோல் அடுக்குகளை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
 
பேபி கார்னில் ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்ப காலங்களில் பேபி கார்னை பெண்கள் சாப்பிடுவது மிக அவசியம். ஏனெனில் ஃபோலிக் அமிலம் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பிறக்காத குழந்தையின் அசாதாரண அறிகுறிகளை தடுக்கிறது.
 
பேபி கார்னில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதேபோல தமனி அடைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் குறைக்கிறது. இதில் உள்ள வேறு சில ஊட்டச்சத்துக்களான துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவை ஒருவருக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.
 
உணவு வகைகளில் பேபி கார்ன் பொரியலாக சமைத்து சாப்பிடப்படுகிறது. அதாவது நீங்கள் இதனுடன் வேறு சில காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சேர்த்து எண்ணைய்யில் வதக்கி சாப்பிடலாம். அதேபோல சாலட் செய்யும்போது அவற்றில் பேபி கார்ன்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments