Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்

எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்
எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் அளப்பறியது. அதன் இலை, காய், விதை என அனைத்துமே பயன் தரக்கூடியது. பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை பயன்படுத்தலாம்.
 
மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
 
சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து இளமையை கூட்டும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
 
பப்பாளிக் காயை கூட்டாக செய்து சாப்பிடு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம்  குறையும். பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
 
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி  விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
 
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி  உடையும்.
 
வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. இது முகப்பருக்களைப் போக்கி  பொலிவு கூட்டும் 
 
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம்  இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை அளவை குறைக்க உதவும் மூலிகைகள்