Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த காய்கறிகளில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா...?

இந்த காய்கறிகளில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா...?
ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான சத்து உண்டு. அநேகம் பேரால் வெறுக்கும் முட்டைக்கோஸில், ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.

முட்டைக்கோஸில்,  தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சல்ஃபர் அதிக அளவில் இருப்பதால், தினமும் சிறிதளவு முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக்  கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த வியாதியும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.
 
இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்து, அதனால்  மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. 
 
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாதுகள், வைட்டமின்கள் போன்ற எல்லாமே இதில் அடங்கியிருக்கிறதாம். ஒரு கப் சமைக்கப்பட்ட முட்டைக்கோஸில்,  முப்பத்து மூன்று கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையும் கூடாது. 
 
இந்தக் காயில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைகக் கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அதனால் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
 
கண் பார்வை தெளிவையும், கண்புரை வருவதையும் தவிர்க்கிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முதுமையின் சாயல் தெரியத்தொடங்கும். தோலில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், தோலின் நிற மாற்றம் ஆகியவைத் தோன்றத் தொடங்கும். அவை உண்டாகாமல் இருக்க முட்டைக்கோஸ் நல்ல ஒரு மருந்தாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!