Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினமும் தூங்கும் முன்னர் இதை சாப்பிடுவதால் இத்தனை பலன்கள் உள்ளதா...?

Garlic
, வியாழன், 12 மே 2022 (10:16 IST)
வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்னர் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத் தொல்லை குறையும்.


தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து சாப்பிட, உடம்பில் உள்ள அதிகபடியான கொழுப்பு போய் விடும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராக வைப்பதோடு, இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள், பூண்டுப் பாலினை சாப்பிட மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும். பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவம் மற்றும் பூச்சிவெட்டினால் முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலி மறையும். புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.ஜலதோஷம், கடுமையான சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் ஒரு பல் பூண்டை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பூண்டுடன் சிறிதளவு ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி குறையும். தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டால் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து அத்திப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருமா...?