Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரண்டையை துவையலாக செய்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா...?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (11:56 IST)
பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.


பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

பிரண்டையை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய்  அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.


பிரண்டையின் மேல்பகுதியில் உள்ள நாரினை உரித்து எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவேண்டும். பச்சை நிறமாக இருக்கும் பிரண்டை பொன் நிறமாக மாறும்வரை வதக்க வேண்டும். அதன்பிறகு மிளகாய்வற்றல் (காய்ந்த மிளகாய்), புளி, வெள்ளைப்பூண்டு, சுவைக்காக உளுந்து, தேங்காய் சேர்த்து அவற்றையும் வதக்க வேண்டும். சூடு ஆறியதும் அம்மி அல்லது மிக்ஸியிலும் அரைக்கலாம்.

இவை செரிமானக்கோளாறு, வாய்வுத்தொல்லை, ஓடு வாய்வு, குடல் வாய்வு, மூச்சுப்பிடிப்பு என அவதிப்படுபவர்கள் இந்த பிரண்டைத் துவையலை அடிக்கடி செய்து சாப்பிட்டு பலன் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments