Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொள்வதால் இத்தனை பயன்களா...!!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (18:04 IST)
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும். இவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் சரியாகும்.


உணவு செரிமானத்தை எளிதாக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. நற்பகலில் நீங்கள் அதிக அளவில் உணவை சாப்பிட்டால், பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உலர் திராட்சையை தினமும் உட்கொண்டால் உடல் சூடு தனித்து, உடல் எடை அதிகரிக்கும். உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது.

மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொண்டால், அந்த நோயில் இருந்து விடுபடலாம். உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.

நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சையை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்க உலர் திராட்சைப் பயன்படுகிறது.

தினமும் காலையில் சிறிது உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். உலர் திராட்சையின் பல மருத்துவ குணங்களில் சிலவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளோம். உங்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உலர் திராட்சை மிகவும் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments