Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழைக்காயை சமைத்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

வாழைக்காயை சமைத்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?
, சனி, 22 ஜனவரி 2022 (11:39 IST)
வாழைக்காய் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது.


வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து எதிர்காலத்தில் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

வாழைக்காய் சிறந்த உணவாக இருக்கிறது. வாழைக்காயில் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் இருக்கிறது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயன மாற்றங்களை ஒழுங்குபடுத்துகிறது.

மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி, அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது.

வாழைக்காயை சமைத்து சாப்பிடுவதால் உடல் அதிகம் பருமன் ஆவதை தடுக்க முடியும். அதிக அளவில் எடுக்கும் பசி உணர்வை கட்டுப்படுத்தி, குறைவாக உணவை உட்கொள்ளும் நிலையை ஏற்படுத்தும்.

வாழைக்காயில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதில் ஜீரணமாக கூடிய அதிக அளவு சத்துக்களை கொண்ட உருளைக்கிழங்கு !!