Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்துமா தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் அம்மான் பச்சரிசி !!

Advertiesment
Amman Pacharisi
, வியாழன், 28 ஜூலை 2022 (11:27 IST)
ஆஸ்துமா தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மூச்சுவிடுவதில் சிரமம், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.


சைனஸ், தும்மல், மூக்கடைப்பு மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க வல்லது பிறகு அம்மன் பச்சரிசி இலைகளையும் சேர்த்து சமைத்து சாப்பிட ஆஸ்துமா தொடர்பான பிரச்சினைகள் குணமடையும்.

இரத்தத்திலுள்ள கெட்ட அழுக்குகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வேப்பிலை இலைகளுடன் மிளகு அம்மன் பச்சரிசி இலைகள் மூன்றையும் அரைத்து  சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

பலவீன உடலுக்கு உடல் வலிமையை தருகிறது. நீண்டநாளாக ஆறாத காயங்களை குணமாக்கவல்லது. கை கால்களில் வீக்கம் உள்ள இடங்களில் இலைகளை அரைத்து பற்றுப் போட்டு வந்தால்  ஐந்து நாளில் வீக்கங்களும் வலியும் குறைந்து குணமடையலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடியது.

அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைக்கும் பொழுது வருகின்ற பாலில், அதிகளவு கால்சியம், அஸ்ட்ரிஜண்ட், டோனிக் போன்றவை காணப்படுகிறது. வயிற்றுபுண், வாய்புண், தோல் நோய்களுக்கு மருத்தாகிறது. அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் கருமையான இடங்களில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி  வந்தால், இழந்த பொலிவை திரும்பவும் பெற முடியும்.

அம்மான் பச்சரிசி பூக்களை சேகரித்து சுத்தம் செய்து பசும்பால் சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது தாய்ப்பால் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை நிற காய்கறிகளின் நன்மைகள்