Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் அம்மான் பச்சரிசி !!

Advertiesment
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும்  அம்மான் பச்சரிசி !!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (22:48 IST)
அம்மான் பச்சரிசியின் இலை, தண்டு, பால், பூ போன்ற அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.  இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய வேறு பெயர்களும் உண்டு.


அம்மான் பச்சரிசி மூலிகையானது ஈரபதம் உள்ள இடங்களில் தானாக வளரும் தன்மையுடையது. இது சிறு செடிவகையாகும். இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் கூரான நுனிப்பற்களுடன் ஈட்டி வடிவ அமைப்பு கொண்டது.

அம்மான் பச்சரிசியை ஒரு கோலி குண்டு அளவு எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு, நமைச்சல் ஆகியவை குணமாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதத்தை போக்கும் குணம் உண்டு. உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து தாது விருத்தி ஏற்படும். இதை வெள்ளி பஸ்பம் என்றும் கூறுவார்கள்.

அம்மான் பச்சரிசியின் இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து 5-7 கிராம் அளவு மோரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலசிக்கலை போக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்க அம்மான் பச்சரிசியின் இலையை அரைத்து மோரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் 3 முதல் 5 நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் அன்னாசி பழம் !!