Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள்...!

Webdunia
சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு வறுத்து, ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட, மலச்சிக்கல் நீங்கி, வயிறு சுத்தமாகும். தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அது குடலியக்கத்தை சீராக்குவதோடு, செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து  விடுவிக்கும்.

 
செம்பருத்தி இலையை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வாருங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 
இஞ்சியை கொதிக்கவைத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
 
கடுக்காயின் பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து, அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதிகாலையில் குடித்து வர வேண்டும்.
 
மலச்சிக்கல் பிரச்சனையின் ஆரம்ப நிலையில், விளக்கெண்ணெய்யை குடித்து வந்தால், நாளடைவில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு  கிடைக்கும்.
 
உலர்ந்த அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் அந்த அத்திப்பழத்தையும், தண்ணீரையும் குடித்து வந்தால்,  நல்ல பலன் கிடைக்கும்.
 
உலர் திராட்சைப் பழங்களை பாலில் காய்ச்சி, திராட்சையை சாப்பிட்டு விட்டு, பின் அந்த பாலை குடிக்க வேண்டும்.
 
சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், ஓமம், கறிவேப்பிலை, ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் வதக்கி பொடி செய்து, காலை உணவுடன் 1  டீஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும்.
 
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சிறிது ஆலிவ் ஆயிலை குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments