Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பால் பணியாரம் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 200 கிராம்
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 3
சர்க்கரை - 150 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
 
முதலில் பச்சரிசி உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி 2 அலது 2 1/2 மணி நேரம் ஊறவைக்க  வேண்டும். பிறகு அதனை சிறிதளவு தண்ணீர் சிறிதளவு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்து வைக்கவும்.
 
அடுப்பில் பணியார கல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து பணியாரக் கல்லில் ஊற்றவும். ஒரு பக்கம் சிவக்க வெந்தவுடன் மறுபுறம் திருப்பி சிவக்க வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும் ஏலத்தை பொடி செய்து சேர்த்துக்கொள்ளவும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து நன்றாக காய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும். பால் கொஞ்சம் ஆறியவுடன் சுடெடுத்த பணியாரங்களை அதனுடன் சேர்த்து ஊறவிட்டு சிறிது நேரம்  கழித்து பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments