Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருங்காலி மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்...!!

கருங்காலி மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்...!!
கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக  பயன்படுத்தப் படுகிறது,
கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். கரப்பான்  நோயினை போக்கவல்லது.
 
பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
 
பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை சரிசெய்யும்.
 
கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உண்டாகும். அனைத்து  வலிகளும் நீங்கும்.
 
கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்கவேண்டும். பின்பு அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். கிருமி நாசினியாவும்  செயல்படுகிறது.
 
இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒருவேலை இதை குடித்து வந்தால் இரத்தத்தில் உல்ள சர்க்கரையின் அளவு குறையும்.
 
கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும்.  இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். மேலும் இவை வாய்ப்புண்ணை அகற்றி வாய்  நாற்றத்தைப் போக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது. இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு உதவும் உணவுகள் பற்றி பார்ப்போம்...!!