Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த காலிஃப்ளவர்...!

Advertiesment
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த காலிஃப்ளவர்...!
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்தப் பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. 
காலிஃப்ளவர் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
காலிஃப்ளவரரில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.
webdunia
இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள்  தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.
 
காலிஃப்ளவர் மன அழுத்தம், இதய நோய்களை குணமாக்கும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
 
காலிஃப்ளவரரில் சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். செரிமானப் பாதையைச் சீர்செய்யும்.
 
இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.
 
இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்கும். உடல் இளைத்தவர்களுக்கு இது  சத்தானது.
 
காலிஃப்ளவரரில் ஆன்டிஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு நினைவாற்றலை அதிகரிக்கிறது. எலும்பு மெலிதல்  பிரச்சனையைத் தாமதப்படுத்துகிறது.
 
வைட்டமின் பி1, 2, 3, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும்  காணப்படுகின்றன. கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும். சத்தான காலிஃப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல்  நலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள சல்ஃபர்  புற்றுநோய் அழிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சளி மற்றும் இருமலை விரட்டும் இயற்கை மருந்து...!