Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். இதில் மெக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ்  செய்யும்.
எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம்  சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்படும் போது தகுந்த பயனை அளிக்கும்.
 
சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட  சரியாகிவிடும்.
 
கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம்  ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.
 
கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செய்ல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும்,  உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
 
கருபட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவை செரிமானம் அடைய  செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படதவாறு செயல்படுகிறது.
 
கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய  பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீரகத்தில் உருவாகும் கல்லின் வகைகளும் அதன் அறிகுறிகளும்....!