Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:53 IST)
பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பது போல வாழைத்தண்டையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம். சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.


கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டில் பொட்டாசியம் சத்தானது நிறைந்துள்ளது. எனவே, வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த நோயும் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

வாழைத்தண்டு ஜூஸ்: வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வாழைத்தண்டில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரும்பு மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள், நம் ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments