Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் ஓமத் தண்ணீர்...!!

Advertiesment
வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் ஓமத் தண்ணீர்...!!
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன்  கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
 
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி  அருந்திவருவது நல்லது.
 
காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று மற்றும் நீரால், சுவாசம், இருமல் போன்ற நோய்கள்  ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.
 
ஓமம் - 250 கிராம், ஆடாதோடைச் சாறு - 135 கிராம், இஞ்சி ரசம் - 135 கிராம், பழரசம் - 130 கிராம், புதினாசாறு - 130 கிராம், இந்துப்பு - 34 கிராம், சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து  வந்தால் இருமல், சுவாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
 
ஓமத் தண்ணீர் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத்  திராவகம்தான். குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
 
ஓமத் தண்ணீர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
 
ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு  நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.  காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
 
வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. சுறுசுறுப்பின்றி  சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பரான சுவையில் பாதுஷா செய்ய வேண்டுமா...!