Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்ட அஸ்வகந்தா !!

Advertiesment
Ashwagandha
, சனி, 2 ஜூலை 2022 (11:16 IST)
அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர், கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும்.


தினமும் காலை மற்றும் மாலை 1/4 தேக்கரண்டி அஸ்வகந்தாவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் நாடி நரம்புகளும் வலுவடையும்.

தினமும் சிறிதளவு அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி உண்டாவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

ஆயுர்வேத மருத்துவர்களாலும், சித்த மருத்துவர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை அது அஸ்வகந்தா எனும் அமுக்கரா தான்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது.

பல மருத்துவர்கள் இது பல விதமான உபாதைகளுக்கும் உபயோகப்படுவதனால், அதிசயம் மூலிகை என்று அஸ்வகந்தாவை கூறுகின்றனர்.

மருத்துவத்தில் அஸ்வகந்தா, வீக்கத்தை குறைக்கவும், காய்ச்சல குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அமுக்கரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் வயோதிகம் போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும், உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியேற்றி, உடலை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் முகத்தில் உண்டாகும் தோல் சுருக்கங்கள் மாறி நீண்ட காலத்திற்கு இளமையை பேண முடியும். மூட்டுவலி உள்ளவர்கள் பாலில் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் மூட்டுவலி தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சௌசௌவில் நிறைந்துள்ள சத்துக்களும் மருத்துவப்பயன்களும் !!