வயிற்று போக்கிற்கான வைத்திய முறைகளில் நிரூபிக்கப்பட்ட மேலும் பழமையான முறைகளில் ஒன்று. எலுமிச்சையில் இயற்கையாகவே நோய் தொற்றுக்களை அழிக்கக்கூடிய பண்பு உள்ளது.
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பதனால் சரியாகும்.
கோடைகாலத்தில் மாதுளைப் பழமானது நிறையக் கிடைக்கும். மாதுளையின் ஜூஸ் மட்டுமல்ல அதன் விதை கூட வயிற்றுப்போக்கிற்கு நல்லது தான். வயிற்றுப்போக்கு ஏற்படும் போது மாதுளைப் பழம் ஜூஸ் குடித்தால் நல்லது. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 டம்ளர் மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.
தேன் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பாதுகாப்பான உணவாகும். தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.
அஜீரணத்திற்கு இஞ்சி ஒரு மிகச் சிறந்த மருந்தாகும். இதில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றுப்போக்கை நிறுத்தும். அரை டீஸ்பூன் சுக்குப் பொடியை மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி காய் வயிற்றுப்போக்கிற்கு நல்ல மருந்தாகும். பப்பாளி காயைத் துருவி மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அந்த கொதித்த நீரை வடிகட்டி சிறிது நேரம் கழித்து குடிக்க வேண்டும்.
ஒரு டம்ளர் மோரில் உப்பு, சிறிது ஜீரகப்பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கிற்கு நல்லது.
வெந்தயத்தில் அதிகப்படியான ஆன்டிபாக்டீரியல் குணம் இருக்கிறது. வீட்டு வைத்திய முறை அனைத்திலும் வெந்தயம் நிச்சயம் இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்துக் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.