Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபத்தை வெளியேற்றும் அற்புத நிவாரணம் தரும் ஆடாதோடை !!

Webdunia
ஆடாதோடை இலையை ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடை என அழைக்கப்படுகிறது. இது சில இடங்களில் சிறு செடியாகவும், மற்றும் ஒரு சில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். 

இது எல்லா இடங்களில் காணப்படும் மூலிகை செடியாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.
 
ஆடாதோடைக்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசாதி, வாசை தோடை, சிங்கம், நெடும்பா, ஆடாதோடை போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.
 
இது வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். சிறுநீரை பெருக்கும். கசரோகம் போக்கும். கபத்தை வெளியேற்றும். மூச்சுதிணறலை நீக்கும். ஆஸ்துமாவை குணமாக்கும். கண்வலி போக்கும். வாயு கோளாறுகளை நீக்கும்.
 
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தும் சிறந்த மருந்தாக ஆடாதோடை விளங்குகிறது. இது நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
 
சீதபேதியினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஆடாதோடை இலைசாற்றுடன் தேன் கலந்து கொடுக்க சீதபேதி விரைவில் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

வெயில் காலத்தில் தயிர் சாதம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மையா?

உணவில் பூண்டு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!

குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் பற்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments