கடுக்காய் என்பது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்ட தாவரமாகும். இது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு காலத்தில் கிடைத்து வந்தந்து. ஆனால் சில காலங்களுக்கு பிறகு மக்கள் இதை பயன்படுத்துவதை விட்டதால் இந்த தாவரம் அவ்வளவாக இப்போது காணப்படுவதில்லை.
கடுக்காயில் பல வகைகள் உண்டு. அவை விசயன், அரோகிணி, பிருதிவி, அமிர்தம் சேதகி, சிவந்தி, திருவிருத்தி, அபயன் ஆகும். இதில் அபயன் கடுக்காய் நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
மருத்துவ குணங்கள்:
• அபயன் கடுக்காய் இந்திய பாரம்பரிய மூலிகையில் முக்கியமான மூலிகையாக இருக்கிறது. குடல் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு இது நன்மை செய்கிறது.
• குடல் சுத்திகரிப்பு மற்றும் மலச்சிக்கலை சரி செய்ய இது உதவுகிறது. எனவே காலை வேளையில் வெறும் வயிற்றில் இதை பொடியாக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
• இரத்தசோகை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருந்தாக அபயன் கடுக்காய் பயன்படுகிறது.
• ஆனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த கடுக்காயை எடுத்துக்கொள்ள கூடாது என கூறப்படுகிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட அபயன் கடுக்காய் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. நாட்டு மருந்து கடை போன்ற சில இடங்களில் அபயன் கடுக்காய் பொடியாகவும், காய வைத்தும் கிடைக்கிறது.