Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ !!

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ !!
இன்று பலரும் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக்  கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. 
 
ஆவாரம் பூக்களை போட்டு வேகவைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.
 
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு,  நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
 
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளலாம்.
 
ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும். ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது.
 
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் வில்வ இலை !!