Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்: சந்திரபாபு நாயுடு கட்சி வெற்றி பெறும்

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்: சந்திரபாபு நாயுடு கட்சி வெற்றி பெறும்

Ilavarasan

, வெள்ளி, 16 மே 2014 (12:48 IST)
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 97 இடங்களில் முன்னிலையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
 
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடை பெற்றது.
 
சீமாந்திராவில் 25 நாடாளுமன்ற தொகுதியும், 175 சட்டசபை தொகுதியும் உள்ளது. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
 
ஓட்டு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்– தெலுங்குதேசம் இடையே இழுபறி நிலையே நீடித்தது. பின்னர் தெலுங்குதேசம் முன்னணி பெற்றது. 12 மணி நிலவரப்படி தெலுங்குதேசம் 97 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி கட்சி 70 இடங்களில் மட்டுமே முன்னணி பெற்று இருந்தது.
 
குப்பம் பாராளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
 
சீமாந்திராவில் 90 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். தெலுங்கு தேசம் 97 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது.
 
9 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைஒச்சராகிறார். ஐதராபாத்தில் கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினார்கள்.
 
சீமாந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்து இருந்தது. ஆனால் அவர் 2 ஆவது இடத்தையே பெற முடிந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 70 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
 
புலிவேந்தலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
 
விசாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்ட அவரது தாயார் விஜயம்மா 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
 
இதேபோல் ஓங்கோல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி பின்தங்கிய நிலையில் இருக்கிறார். கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன் மோகனின் சித்தப்பா மகன் அவினாஷ் ரெட்டி வெற்றி பெறுகிறார். நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரோஜா 6 ஆயிரம் ஓட்டு முன்னணியில் உள்ளார்.
 
கர்னூல், நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டகளில் மட்டுமே ஜெகன்மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com
 
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm

Share this Story:

Follow Webdunia tamil