ஜம்மு-காஷ்மீரில் உள்ள டோடா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தளபதியை பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
டோடா மாவட்டத்தின் மர்மத் பகுதியில் உள்ள தீடா வனத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் இன்று அதிகாலை தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த முஹம்மது உஸ்மா என்ற தீவிரவாதியை அவர்கள் சுட்டுக் கொன்றதாகவும், தீவிரவாதியிடம் இருந்து ஒரு ஏ.கே-47 ரகத் துப்பாக்கி மற்றும் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.