Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளா‌வி‌ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தா‌க்‌கிய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்டுக‌ள்

கேரளா‌வி‌ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தா‌க்‌கிய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்டுக‌ள்
, திங்கள், 9 ஜனவரி 2012 (10:19 IST)
கேரளா‌வி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ரை மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி தொண்டர்கள் தா‌க்‌கிய ‌நிக‌ழ்வு பெரு‌ம் பத‌ற்ற‌த்தை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பி.பி.விஸ்வநாத், தனது தொகுதியில் ரோடு ஒன்றை திறந்து வைக்க சென்று கொண்டிருந்தார்.

இதற்கான நிகழ்ச்சி நிரலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஒருவரின் பெயரை சேர்க்கவில்லை என்று கூறி, ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் ஏராளமானோர், திரண்டு சென்று எம்.எல்.ஏ. விஸ்வநாத்தை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது எம்.எல்.ஏ. விஸ்வநாத்தை க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் தொ‌ண்ட‌ர்க‌ள் ச‌ரிமா‌ரியாக தா‌க்‌கின‌ர். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்க‌ள் 17 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil