Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிறம் மாற்றும் முடிவை கைவிட்ட ZOMATO..! எதிர்ப்புக்கு பணிந்தது..!

ZOMOTO

Senthil Velan

, புதன், 20 மார்ச் 2024 (10:01 IST)
சைவ உணவு பிரியர்களின் உணவை பிரித்துக் காட்டும் வகையில் பச்சை நிற டி-ஷர்ட், பச்சை நிற பாக்ஸ் முறை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை கைவிடுவதாக ZOMATO நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ZOMATO நிறுவனம் சிவப்பு நிறப் பெட்டியில் அனைத்து வகையான உணவுகளையும் (சைவம் / அசைவம்) பயனாளர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று வழங்கும் சேவையை வழங்கி வருகிறது.
 
இதனிடையே  சைவ உணவை மட்டுமே டெலிவரி செய்யும் சேவையை ZOMATO நேற்று தொடங்கியது.  சைவ உணவு என்பதை குறிப்பதற்காக ஊழியர்களுக்கு பச்சை நிறம் கொடுக்கப்பட்டது.
 
இந்த புதிய சேவையின் தொடக்கம் முழுக்க முழுக்க சைவ உணவை விரும்புபவர்களுக்காக மட்டுமே என்று ZOMATO நிறுவனர் தீபீந்தர் கோயல் தெரிவித்திருந்தார்.

 
சமூக வலைதளங்களில் அதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த முடிவை ZOMATO நிறுவனம் கைவிட்டுள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாக உணவு கொண்டுவரப்படும் என்பது தொடரும் என்றாலும், அவர்களை நிற ரீதியில் வேறுபடுத்தும் முடிவை கைவிடுவதாக ZOMATO நிறுவனர் தீபீந்தர் கோயல் தற்போது அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை விட மோசமான நிலை.. பரிதாபத்தில் கேரள பாஜக..!