Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான ஆறு நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: திருவள்ளூரில் பரபரப்பு

Siva
ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (10:40 IST)
திருவள்ளூர் அருகே, திருமணமான ஆறு நாட்களில் நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, காசிரெட்டி பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயது உதயகுமார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டார்.
 
திருமண விருந்துக்காக மணமகளின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு காலை உதயகுமார் தனது நண்பர்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரை அவரது குடும்பத்தினர் தேடினர்.
 
அப்போது, அவர் விபத்தில் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உதயகுமார் உயிரிழந்தார்.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. திருமணமான ஆறு நாட்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் இதுதான்: அன்னா ஹசாரே

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

படிக்காதவர்களையும், படித்து பட்டம் பெற்றவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது: கடம்பூர் ராஜு

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

மீண்டும் 14 தமிழகம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்