Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபர் ; முதலை கடித்ததில் கையை இழந்தார்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (15:52 IST)
நாக்பூரை சேர்ந்த வாலிபர், ஒரு ஏரியில் இறங்கிய தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்றுவதற்காக, ஏரியில் குதித்து, முதலை கடித்ததில் அவர் தனது கையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுள்ளது.


 

 
நாக்பூரை சேர்ந்த தந்த்வாடே என்ற வாலிபர் பெங்களூரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் கர்நாடகாவின் ராமனாகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
அவரும், அவருடைய நண்பர்களும் தங்கள் வளர்ப்பு நாய்களையும் அழைத்து சென்றனர். அப்போது அந்த காட்டில் இரு ஏரி இருந்துள்ளது. அதை பார்ப்பதற்காக அருகில் சென்றுள்ளனர். அப்போது, தந்த்வாடேவின் செல்ல நாய் ஏரி தண்ணீரில் குதித்தது. எனவே, அதனைக் காப்பற்றும் நோக்கத்துடன் அவர் ஏரி நீரில் குதித்தார்.
 
அந்த ஏரியில் முதலை இருப்பது குறித்து அங்கு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர் கவனிக்கவில்லை. எனவே, அப்போது அங்கு வந்த முதலை அவரின் இடது கையை கடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் நண்பர்கள், அவரை முதலையிடமிருந்து எப்படியோ மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  
 
அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்ததாக அவர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments