Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

100 மதுபாட்டில் மற்றும் 120 லிட்டர் சாராயம் கடத்திய 24வயது இளம்பெண் கைது!

Advertiesment
புதுச்சேரி
, செவ்வாய், 23 ஜனவரி 2018 (17:00 IST)
இளம்பெண் ஒருவர் 100 மது பாட்டில் மற்றும் 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கடத்தியபோது சோதனை சாவடியில் சிக்கினார்.

 
அனுசுயா(24) என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் மற்றும் சாரயம் கடத்தி உள்ளார். புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு எடுத்துச் சென்றபோது ஆல்பேட்டை சோதனை சாவடியில் சிக்கினார். இவரிடம் இருந்து 100 மது பாட்டில் மற்றும் 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
காவல்துறையினர் அனுசுயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுசுயா கைதான செய்தியை அறிந்த அவரது கணவர் லெனின் குமார் தலைமறைவாகி விட்டார். காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இளம்பெண் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவ, மாணவிகள் ; மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு? (வீடியோ)