நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வதற்காக பல இளைஞர்கள் ரிஸ்க் எடுத்து வருகின்றனர் என்றும் இதில் சில விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு சிலர் தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளார் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
சமீபத்தில் கூட ஒரு இளம் தம்பதி தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது ரயில் வந்ததை அடுத்து இருவரும் கீழே குதித்த கால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கும்பே நீர்வீழ்ச்சி அருகே இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து விட்டார். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பாலவேசங்களை கொண்ட இவர் அவ்வப்போது வெளியிடும் ரீல்ஸ் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வந்தது.
அந்த வகையில் நீர்வீழ்ச்சி அருகே இவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென கீழே விழுந்தார். இதனை அடுத்து அங்கு இருந்த மீட்பு படையினர் அவரை படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.
ஆன்வி கம்தார் என்ற பெயருடைய இவருடைய மரணம் அவரது ஃபாலோவர்ஸ்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.