எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.2,500 ஏ.டி.எம்-ல் எடுத்துக் கொள்ளலாம்
எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.2,500 ஏ.டி.எம்-ல் எடுத்துக் கொள்ளலாம்
ஒரு நாளைக்கு, வெவ்வேறு ஏ.டி.எம்-களில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.2500 பொதுமக்கள் எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதிய நோட்டுகளை ஏ.டி.எம்-ல் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை மட்டுமே ஒருவரால் எடுக்க கூடிய நிலை இருந்தது. அது தற்போது மாற்றியமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு நீங்கள், ரூ.2500 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம், அதுவும் வெவ்வேறு ஏ-டி.எம்-களில் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வங்கிகளில் எடுக்கும் பணத்தின் மதிப்பு 4 ஆயிரத்திலிருந்து 4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் என்பதை அதிகரித்து ரூ.24,000 வரை எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் கூடுதல் ஏ.டி.எம் மையங்கள் திறக்கப்படும். அதேபோல், நடமாடும் மைக்ரோ ஏ.டி.எம்-கள் அதிகரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.