மொழியை வைத்து குறுகிய அரசியல்.. முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த யோகி..!

Mahendran
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:54 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக அட்டாக் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழிச் சர்ச்சை குறுகிய அரசியல் நலனுக்காக உருவாக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறார்கள்," என்று தெரிவித்திருந்தார்.
 
"தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி போன்ற மொழிகளை உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கிறோம். அதனால் உத்தரப் பிரதேசம் குறைந்துவிட்டதா? உத்தரப் பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன," என்றும் அவர் கூறினார்.
 
முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக யோகி விமர்சித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, மும்மொழி கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
"வெறுப்பு அரசியல் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் சொல்ல வேண்டியதில்லை," என்று முதல்வர் தனது பதிலடியில் தெரிவித்திருந்தது, மேலும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments