முஸ்லிம் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அம்பேத்கர் இதை எதிர்த்து உள்ளார் என்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பாஜக இதனை கடுமையாக எதிர்த்துள்ளது.
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பாஜக கூறிவரும் நிலையில் உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சர் இன்று இது குறித்து தனது அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
மத அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அம்பேத்கர் இதை கடுமையாக எதிர்த்தார் என்றும் ஆனால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க போட்டி போடுகின்றன என்றும் யோகி தெரிவித்தார்.
மேலும் எஸ்.டி, எஸ்.டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை பாதுகாக்க எந்த விதமான முஸ்லிம் இட ஒதுக்கீட்டையும் பாஜக எதிர்க்கிறது என்றும் முஸ்லிம் இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.