Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Yes Bank-ஐ வச்சி செய்யும் மத்திய அரசு? நிர்மலா சீதாராமன் சொன்ன செய்தி!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (12:17 IST)
ரிசர்வ் வங்கியின் பிடிக்கு வந்துள்ள யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 
 
மேலும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதோடு, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ முன்வந்துள்ளது.
 
இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே யெஸ் வங்கியை கவனித்து கொண்டிருக்கின்றோம். இந்த பாதிப்பு திடீரென ஏற்பட்டது அல்ல.  யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்மூடித்தனமாக தாக்கும் இஸ்ரேல்! சாலையெங்கும் பிணங்கள்! - 50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு.. கனடாவில் பெரும் பரபரப்பு..!

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி..!

காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments