Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் மஞ்சள் காய்ச்சல்! தடுப்பூசி கட்டாயம்! – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 14 மே 2024 (13:02 IST)
தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் தொற்றினால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சல் என்ற காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் இந்த மஞ்சள் காய்ச்சலுக்கு தனிப்பட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. நோயின் அறிகுறிக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மஞ்சள் காய்ச்சல் அதிகரித்து வருவதால் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்பவர்களும், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ: டாஸ்மார்க் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு!

இந்த தடுப்பூசியை செலுத்தி 10 நாட்கள் கழித்தே குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு செல்ல முடியும். அதுபோல இந்தியாவிற்குள் வருபவர்களும் தடுப்பூசி செலுத்தி 10 நாட்கள் கழித்தே இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments