Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் இருந்து போலி இயந்திரம்: இது மோசடி தேர்தல்: பொங்கும் எடியூரப்பா!

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (12:04 IST)
கர்நாடக தேர்தல் நடந்து முடிந்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத எடியூரப்பா பதவி விலகினார். நாளை காங்கிரஸ் - மஜக கூட்டணியில் குமரசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார். 
 
இந்நிலையில், பதவி விலகிய எடியூரப்பா நடந்த முடிந்த தேர்தல் மோசடியானது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத்த்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு, 
 
விஜயபுரா மாவட்டத்தில் ஏராளமான விவிபேட் இயந்திரங்கள் அனாதரவாக விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, தேர்தல் நேர்மையான முறையில் நடந்திருக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
விஜயபுரா மாவட்டத்தில் எட்டு விவிபேட் இயந்திரங்களை வைக்கும் பெட்டிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்த விவிபேட் இயந்திரங்கள் உண்மையானவை அல்ல. 
குஜராத்தை சேர்ந்த ஜோதி பிளாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலி இயந்திரங்கள் இவை. விவிபேட் இயந்திரங்களை செயல்படுத்துவதற்கு தனியாக 6 இலக்க கோட் வார்த்தை உண்டு. ஆனால் இந்த இயந்திரங்களில் அவை இல்லை என் கூறப்பட்டுள்ளது. 
 
ஆனால், இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்

இனிமேல் Swiggy, Zomato இல்லை. சொந்த செயலியை தொடங்கிய ஹோட்டல்கள் சங்கம்

4வது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments