உலகில் மிகவும் பழமை வாய்ந்த முதல் அரசாட்சி அமைத்த நாடுகளின் பட்டியலை உலக மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
உலகம் தோன்றி மனிதன் நாகரீகமடைந்த காலத்தே பல்வேறு பண்பாடுகள், அரசாங்கங்கள் தோன்றி மறைந்துள்ளன. அவ்வாறாக மறைந்த பண்பாட்டு தடங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்து வரலாற்றை, பண்பாட்டை உலகத்திற்கு வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் மிகவும் பழமையான முதல் ஆட்சி அமைத்த நாடுகள் குறித்த டாப் 10 பட்டியலை உலக மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் இடத்தில் ஈரான் உள்ளது. இங்குதான் கி.மு.3,200ல் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாகரிகம் வரலாற்றி மெசபடோமியா என்று அழைக்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் கி.மு.3,200ம் ஆண்டில் தொடங்கிய எகிப்து நாகரிகம் உள்ளது. ஆறாவது இடத்தில் சீனா உள்ளது. சீனாவில் கி.மு 2070-ல் தான் அரசு என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. கி.மு2000ம் ஆண்டில்தான் இந்திய நிலப்பகுதியில் அரசு உருவானதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.